Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன்; கட்சி அறிவிப்பை வெளியிட்ட ரஜினி

கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன்; கட்சி அறிவிப்பை வெளியிட்ட ரஜினி

By: Nagaraj Thu, 03 Dec 2020 4:37:50 PM

கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன்; கட்சி அறிவிப்பை வெளியிட்ட ரஜினி

உயிரே போனாலும் பரவாயில்லை. கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன். நான் வெற்றியடைந்தால் மக்களின் வெற்றி என்பது போல தோல்வியடைந்தாலும் அது மக்களின் தோல்வி தான்.

வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் என சற்று நேரத்திற்கு முன் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த நிலையில், போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.

அப்போது, கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ம் ஆண்டே கூறியிருந்தேன். மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன்.

ஆனால், கொரோனா காரணமாக என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என தெரிவித்தார்.

Tags :
|