Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த வருடம் பிறந்தநாளை நான் கொண்டாடமாட்டேன் - மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே

இந்த வருடம் பிறந்தநாளை நான் கொண்டாடமாட்டேன் - மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே

By: Karunakaran Fri, 24 July 2020 10:21:39 AM

இந்த வருடம் பிறந்தநாளை நான் கொண்டாடமாட்டேன் - மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர மாநில முதல்மந்திரியாக உள்ள உத்தவ் தாக்கரே 1960 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பிறந்தார். இவரது பிறந்தநாளை அவரது சிவசேனா கட்சியின் தொண்டர்கள் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடுவர். ஆண்டுதோறும் உத்தவின் பிறந்தநாளில் மகாராஷ்டிரா முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், கலைநிகழ்ச்சிகள் என விழாக்கோலமாக இருக்கும்.

தற்போது உத்தவ் தாக்கரேவின் 60-வது பிறந்தநாள் வரும் திங்கள் கிழமை வரவுள்ளது. ஆனால் தற்போது, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவி வருவதால், தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என உத்தவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

uddhav thackeray,maharashtra,birthday,plasma camps ,உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா, பிறந்த நாள், பிளாஸ்மா முகாம்கள்

இதுகுறித்து உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த வருடம் எனது 60-வது பிறந்தநாளை நான் கொண்டாடமாட்டேன். எனது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவிக்க யாரும் என் வீட்டிற்கு வரவேண்டாம். போஸ்டர்கள், பேனர்கள் இருக்கக்கூடாது. தொண்டர்கள் கூட்டமும் இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அலங்காரங்களுக்கு செலவிடுவதை விட அந்த பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளியுங்கள். கொரோனா வைரசை எதிர்த்து போரிட இந்த நிதி பயன்படுத்தப்படும். மக்களுக்கு உதவும் வகையில் பிளாஸ்மா தானம், ரத்ததானம் மற்றும் சுகாதார மையங்களை ஏற்பாடு செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags :