Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ள சிறிதும் தயங்க மாட்டேன் - ஜோ பைடன்

கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ள சிறிதும் தயங்க மாட்டேன் - ஜோ பைடன்

By: Karunakaran Tue, 17 Nov 2020 12:05:08 PM

கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ள சிறிதும் தயங்க மாட்டேன் - ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடன் அதிபராக அடுத்த ஆண்டு ஜனவரியில் பதவி ஏற்கவுள்ளார். அந்நாட்டில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் முனைப்பு காட்டாமல் டிரம்ப் இருந்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதில் நான் சிறிதும் தயக்கம் காட்ட மாட்டேன் என்று கூறினார்.

மேலும் அவர், தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு பற்றி மக்கள் தயங்குவதற்கு ஒரே காரணம் அதிபர் டொனால்டு டிரம்ப். அதிக தேவை உள்ள நபர்களுக்கு தடுப்பு மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பது அவசியம் என்று கூறினார். அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா, கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் 11 நிறுவனங்களுள் ஒன்று.

hesitate,corona vaccines,joe biden,america ,தயக்கம், கொரோனா தடுப்பூசிகள், ஜோ பிடன், அமெரிக்கா

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு கொண்ட தடுப்பூசிகளில் ஒன்றாக திகழும் மாடர்னா நிறுவனத்தின் மருந்து 95 சதவீதம் திறன் கொண்டது என்பது பரிசோதனையில் தெரிய வந்திருப்பதாக மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பிஜர் தடுப்பு மருந்து 90 சதவீதம் திறன் வாய்ந்தது என கடந்த வாரம் இறுதியில் அறிவிப்பு வெளியானது.

இதுகுறித்து பைடன் பேசியபோது, சர்வதேச சமூகம் மற்றும் சர்வதேச தலைவர்களுடன் நாம் தெளிவான பாதையில் பயணிக்கிறோம். இந்த இரு தடுப்பு மருந்துகளையும் விஞ்ஞானிகள் சமூகம் கவனத்தில் கொண்டுள்ளது. இந்த தடுப்பு மருந்துகள் தயாராகி விட்டது போல் தெரிகிறது. பயன்பாட்டிற்கும் தயாராக உள்ளது. இது தொடரும் பட்சத்தில் தடுப்பு மருந்துகளை நான் எடுத்துக் கொள்வேன். அதில் தயக்கம் காட்ட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Tags :