Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

By: vaithegi Thu, 30 Nov 2023 3:00:25 PM

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

சென்னை: கடந்த 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இச்சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது .இதையடுத்து இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

mp rahul gandhi,vijayakanth , எம்.பி. ராகுல் காந்தி ,விஜயகாந்த்


இந்த நிலையில், விஜயகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நடிகரும் தேமுதிக நிறுவனருமான திரு விஜயகாந்தின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டு மிகுந்த கவலை அடைந்தேன்.

மேலும் அவரது பல லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுடன் இணைந்து அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான காலத்தை கடக்கும் திரு விஜயகாந்த் குடும்பத்தினருக்கு எனது அன்பும் ஆதரவும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :