Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மம்தா பானர்ஜி, விரைவில் குணமடையவும், விரைவில் நலமுடன் திரும்பி வரவும் விரும்புகிறேன் .. முதலமைச்சர் டிவிட்

மம்தா பானர்ஜி, விரைவில் குணமடையவும், விரைவில் நலமுடன் திரும்பி வரவும் விரும்புகிறேன் .. முதலமைச்சர் டிவிட்

By: vaithegi Wed, 28 June 2023 10:04:42 AM

மம்தா பானர்ஜி, விரைவில் குணமடையவும், விரைவில் நலமுடன் திரும்பி வரவும் விரும்புகிறேன்  ..  முதலமைச்சர் டிவிட்

சென்னை : மம்தா விரைவில் குணமடைய வேண்டும் -- மு.க.ஸ்டாலின் .... கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் மருத்துவர்கள் நடத்திய எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இடது முழங்கால் மூட்டு மற்றும் இடது இடுப்பு மூட்டு போன்றவற்றில் தசைநார் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியும், மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் மருத்துவமனையை விட்டு வெளியேறினார், எனினும் அவர் தனது வீட்டில் சிகிச்சையைத் தொடருவார் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

chief minister mamata banerjee ,முதலமைச்சர் ,மம்தா பானர்ஜி

இதனையடுத்து நடைபெற உள்ள பஞ்சாயத்துத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக 2 நாள் பயணத்திற்குப் பிறகு கொல்கத்தாவுக்கு முதல்வர் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர் பயணித்த ஹெலிகாப்டர் செவோக் விமான தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் மம்தா பானர்ஜி காயமடைந்ததாகவும், உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் உடல்நிலை பற்றி கவலை தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது, “மாண்புமிகு மேற்கு வங்க முதல்வரின் உடல்நிலை குறித்து கேள்விபட்டு கவலையடைந்தேன். ஹெலிகாப்டர் திடீரென அவசரமாக தரையிறங்கியதில் காயம் அடைந்த மம்தா பானர்ஜி, விரைவில் குணமடையவும், விரைவில் நலமுடன் திரும்பி வரவும் விரும்புகிறேன்” என டிவிட்டரில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :