Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் நான் கையெழுத்து போட்டிருக்க மாட்டேன் - சல்மான் குர்ஷித்

சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் நான் கையெழுத்து போட்டிருக்க மாட்டேன் - சல்மான் குர்ஷித்

By: Karunakaran Mon, 31 Aug 2020 12:50:39 PM

சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் நான் கையெழுத்து போட்டிருக்க மாட்டேன் - சல்மான் குர்ஷித்

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை, அமைப்பு ரீதியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என குரல் கொடுத்து மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய சம்பவம் கட்சி மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சல்மான் குர்ஷித் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அதில், கட்சித்தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்து பெற என்னை நாடி இருந்தால், நான் கையெழுத்து போட்டிருக்க மாட்டேன். குலாம் நபி ஆசாத், காஷ்மீரை சேர்ந்த மூத்த தலைவர். கட்சியில் தேர்தல்கள் நடைபெறவில்லை, ஆனாலும் கட்சி வளர்ந்து வருகிறது. தற்போது கட்சியில் மாற்றம் தேவை என அவர் விரும்பி இருக்கலாம் என்று கூறினார்.

sign,letter,sonia gandhi,salman khurshid ,கையெழுத்து, கடிதம், சோனியா காந்தி, சல்மான் குர்ஷித்

கடிதம் எழுதிய முக்கிய நபர்கள், கட்சியின் உயர் மட்டத்தை சேர்ந்தவர்கள். இதை கட்சிக்குள் விவாதித்து இருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என சோனியா காந்தி சுட்டிக் காட்டி உள்ளார். கட்சிக்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதம் இருப்பது தெரிகிறது. அதை சாத்தியமாகிறபோது உரிய நேரத்தில் செய்ய முடியும். என்னைப் போன்றவர்களுக்கு ஏற்கனவே தலைவர்கள் உள்ளனர். சோனியா காந்தி எங்களுக்கு தலைவர். ராகுல் காந்தி, எங்களுக்கு தலைவர் என சல்மான் குர்ஷித் கூறினார்.

மேலும் அவர், தலைவரை தேர்ந்தெடுப்பது எப்போது முடியுமோ அப்போது அது நடக்கட்டும். ஆனால் அதற்கான வானம் கீழே இடிந்து விழுவதை நான் காணவில்லை. அதில் என்ன அவசரம் இருக்கிறது என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை. நாங்கள் பகுதி நேர தலைவரை பெற்றிருக்கவில்லை. முழு நேர தலைவர்தான் இருக்கிறார். முழு நேர தலைவர்தான் இடைக்கால தலைவர். இடைக்கால தலைவர், சாதாரண நபர் அல்ல. அவர் நீண்ட காலம் பதவி வகித்து வந்த தலைவர். நாம் அவரை நம்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags :
|
|