Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இட்லி, பூரி, தோசை சூப்பர்... சைக்கிளில் உலகம் சுற்றும் நெதர்லாந்து தோழிகள் உற்சாகம்

இட்லி, பூரி, தோசை சூப்பர்... சைக்கிளில் உலகம் சுற்றும் நெதர்லாந்து தோழிகள் உற்சாகம்

By: Nagaraj Sat, 07 Jan 2023 1:16:15 PM

இட்லி, பூரி, தோசை சூப்பர்... சைக்கிளில் உலகம் சுற்றும் நெதர்லாந்து தோழிகள் உற்சாகம்

சென்னை: தமிழக உணவுகளான இட்லி, பூரி, பொங்கல், தோசை போன்றவற்றை விரும்பி சாப்பிடுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சைக்கிளில் உலகம் சுற்றும் நெதர்லாந்து தோழிகள் தெரிவித்தனர். இவர்கள் தற்போது சென்னை வந்தடைந்துள்ளனர்.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தோழிகள் 10 பேர் ஒரு கல்வி அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு நாடுகளுக்குச் சென்று அவர்களின் நிலைமை அறிந்து கல்வி உதவி செய்து வருகின்றார்கள். இவர்கள் நாட்டில் டாக்டர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் தொழில்நுட்ப வல்லுனர்களாகவும் இருக்கின்றனர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி கணவன், மகன், குழந்தைகள், பேரக் குழந்தைகள் என குடும்பம் இருக்கின்றது.

இவர்கள் உலகம் முழுவதும் நாடு நாடாகச் சென்று சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார்கள். அந்த வகையில் தற்போது இந்தியாவில் தமிழகத்தை தேர்வு செய்திருக்கின்றனர். இவர்கள் சென்னை வந்த பிறகு சைக்கிள் மூலம் பயணம் சென்றால்தான் மக்களின் வாழ்வாதார நிலைமைகளை கண்டுபிடிக்க முடியும் என பத்து பேரும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிள் பயணத்தை தொடங்கினர்.

netherlands,friends,italian,puri,happiness,cycling ,நெதர்லாந்து, தோழிகள், இட்லி, பூரி, மகிழ்ச்சி, சைக்கிள் பயணம்

இவர்கள் மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி, சேலம் வழியாக மதுரையில் தங்கள் பயணத்தை நிறைவு செய்கின்றனர். இவர்கள் அடிதட்ட நிலையில் இருக்கும் வசதியற்ற ஏழை குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக முதன் முதலில் தமிழகம் வந்திருப்பதாக தெரிவித்தார்கள். மேலும் சுற்றுலா தளங்களில் இருக்கும் பிரதான சின்னங்கள், பொழுதுபோக்கு மையங்கள், வசிப்பதற்கும் பார்ப்பதற்கும் அழகாக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 10 தோழிகளும் 50 வயதை கடந்திருந்தாலும் இளம்பெண்கள் போல் உத்வேகத்துடன் செயல்படுகின்றார்கள். இவர்கள் ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டருக்கு சைக்கிள் ஓட்டுவோம் எனவும் எங்களுக்கு களைப்பு என்பதே வராது எனவும் ஹோட்டல்களில் சாப்பிட்டு எங்கள் உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

ஆகையால் சமையல் கலைஞருடன் நடமாடும் ஓட்டல் போன்று ஒரு வேனும் உடன் வந்திருந்தது. இவர்களுக்கு தமிழக உணவுகளான இட்லி, பூரி, பொங்கல் தோசை உள்ளிட்டவற்றை விரும்பி சாப்பிடுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார்கள் நெதர்லாந்து தோழிகள்.

Tags :
|