Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரு குழந்தை சரியாகப் படிக்கவில்லை எனில், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் .. முதன்மைச் செயலர்

ஒரு குழந்தை சரியாகப் படிக்கவில்லை எனில், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் .. முதன்மைச் செயலர்

By: vaithegi Wed, 10 Aug 2022 3:16:06 PM

ஒரு குழந்தை சரியாகப் படிக்கவில்லை எனில், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் ..  முதன்மைச் செயலர்

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு முழு நேரமும் செயல்பட்டு கொண்டு வருகிறது. . கடந்த கல்வியாண்டில் பாதி நாட்கள் கொரோனா தாக்கத்தால் விடுமுறை விடப்பட்டிருந்தால் அந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் மாணவர்களுக்கு விரைந்து பாடங்களை நடத்தி அவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் நோக்கிலும் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

இதை அடுத்து நடப்பாண்டு கல்வியாண்டில் திட்டமிட்டபடி ஜூன் மாதத்திலேயே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள்பல எழுந்து கொண்டு வருகிறது.

principal secretary,department of education ,முதன்மைச் செயலர்,பள்ளிக்கல்வித்துறை

எனவே விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து முதன்மைச் செயலர் அணைத்து தனியார் பள்ளிகள் இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் ஒரு குழந்தை சரியாகப் படிக்கவில்லை எனில், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சிறப்பு கல்வியாளரிடம் குழந்தையை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வர வழைக்க கூடாது. பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் குறிப்பிடபட்டுள்ளது.

Tags :