Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹோட்டல்களில் ஒரு நாள் அறை வாடகை ரூ.1000 க்கும் குறைவாக வசூலிக்கப்பட்டால் ...ஜி.எஸ்.டி. வரி ரத்து

ஹோட்டல்களில் ஒரு நாள் அறை வாடகை ரூ.1000 க்கும் குறைவாக வசூலிக்கப்பட்டால் ...ஜி.எஸ்.டி. வரி ரத்து

By: vaithegi Wed, 29 June 2022 2:36:39 PM

ஹோட்டல்களில் ஒரு நாள் அறை  வாடகை ரூ.1000 க்கும் குறைவாக வசூலிக்கப்பட்டால் ...ஜி.எஸ்.டி. வரி ரத்து


இந்தியா : நாம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்படும் அனைத்து பொருட்களுக்குமே ஜி.எஸ்.டி வரி செலுத்தி கொண்டு இருக்கிறோம். பொருட்களுக்கு மட்டுமல்லாமல் குடியிருப்புகள், ஹோட்டல்கள் என அனைத்து சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். தற்போது ஜி.எஸ்.டியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

அடுப்பின்படி, மருத்துவமனைகளில் ஒரு நாள் வாடகையாக ரூ.5 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கப்பட்டால் 5 சதவீத வரி விதிக்க வேண்டும் எனவும், ஹோட்டல்களில் நாள் ஒன்றிற்கு ரூ.1000 க்கும் குறைவாக வாடகை வசூலிக்கப்பட்டால் அதற்கு ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அஞ்சல் அட்டை, உள்நாட்டு கடிதங்கள், புக் போஸ்ட், 10 கிராமுக்கு குறைவான கடித உறைகள் ஆகியவைகளை தவிர அனைத்து விதமான அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

gst,hotel ,ஜி.எஸ்.டி,ஹோட்டல்

இதைதொடர்ந்து காசோலைகள் தனித்தனியாகவோ அல்லது புத்தகமாகவோ இருந்தால் 18 சதவீத வரி விதிக்கவேண்டும் என ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் குடியிருப்புகளை வாடகைக்கு விடும் வர்த்தக நிறுவனங்களுக்கு அளித்திருந்த வரிவிலக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாக்கெட்டில் அந்தந்த நிறுவனங்களுக்குரிய லேபிள் ஒட்டி விற்கப்படும் தயிர், லஸ்சி, கோதுமை மாவு ஆகியவற்றிற்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய், நிலக்கரி, எல்.இ.டி. விளக்கு, அச்சு மை, சோலார் வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றிற்கு செலுத்தப்படும் ஜி.எஸ்.டி. வரியை மாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள், குதிரை பந்தயம் ஆகியவற்றிற்கு 28 சதவீத வரி செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|