Advertisement

இத்தனை ஆண்டுகள் உழைப்பை களங்கம் கூறினால் கோபம் வரும்

By: Nagaraj Tue, 22 Nov 2022 7:33:35 PM

இத்தனை ஆண்டுகள் உழைப்பை களங்கம் கூறினால் கோபம் வரும்

சென்னை: காயத்ரி ரகுராம் வேதனை... என்னை விமர்சனம் செய்தால் திருப்பி பதிலடி கொடுப்பேன் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம் பேசுகையில், கட்சிக்கு களங்கம் எனக்கூறி சஸ்பெண்ட் செய்தது மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் விசாரணை நடத்தாமல் முடிவெடுக்கப்பட்டுள்ளது. என் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுப்பது நியாயமில்லை. கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். எனது 8 வருட உழைப்ழை களங்கம் என்று கூறினால் எனக்கு கோபம் வரும். என் மீது திட்டமிட்டு பழி சுமதப்படுகிறது. மேலிடத்திற்கு என்னை பற்றி தவறான கருத்துக்கள் அனுப்பப்படுகிறது. சமீபத்தில் கட்சிக்கு வந்தவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தம்.

call,not give,reply,explanation,top ,அழைப்பு, கொடுக்கவில்லை, பதிலடி கொடுப்பேன், விளக்கம், மேலிடம்

ஒரு பெண்ணை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒரு பெண்ணாக, பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை. பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது.

என்னை விமர்சனம் செய்தால் திருப்பி பதிலடி கொடுப்பேன். கட்சி பொறுப்பு இல்லையென்றாலும் நான் பாஜக தொண்டர்தான். என் மீது தவறு இல்லாதபோது நான் பயப்பட வேண்டியதில்லை.

பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன். மேலிடம் அழைக்கும்போது தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|