Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரோடு இடைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால் எதிர்த்து நானும் களம் காண்பேன்

ஈரோடு இடைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால் எதிர்த்து நானும் களம் காண்பேன்

By: Nagaraj Sun, 15 Jan 2023 8:46:07 PM

ஈரோடு இடைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால் எதிர்த்து நானும் களம் காண்பேன்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என காயத்திரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகை காயத்ரி ரகுராம் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகினார். அண்ணாமலை தலைமையிலான தமிழக பா.ஜ., பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக உள்ளது என குற்றம் சாட்டினார். இதையடுத்து அவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என காயத்திரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலையை போட்டியிட வைக்கிறேன், சவால் விடுகிறேன். டெல்லியில் உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் வெளிவரட்டும்.

annamalai,bjp,by-election,gayatri raghuram, ,அண்ணாமலை, காயத்ரி ரகுராம், சென்னை, பாஜக

சவாலை ஏற்பீர்களா?” என தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீங்கள் தமிழகத்தின் மகன் என்றும் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான திருமகன் ஈவேரா, கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் காலமானார்.இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி தற்போது காலியாக உள்ளது.

Tags :
|