Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெலாரஸ் இன்று தோல்வியடைந்தால் அடுத்தது ரஷியா - அலெக்சாண்டர் லூகாஷென்கோ

பெலாரஸ் இன்று தோல்வியடைந்தால் அடுத்தது ரஷியா - அலெக்சாண்டர் லூகாஷென்கோ

By: Karunakaran Wed, 09 Sept 2020 10:51:44 AM

பெலாரஸ் இன்று தோல்வியடைந்தால் அடுத்தது ரஷியா - அலெக்சாண்டர் லூகாஷென்கோ

பெலாரஸ் நாட்டில் கடந்த 26 ஆண்டுகளாக அலெக்சாண்டர் லூகாஷென்கோ அதிபராக பதவி வகித்து வருகிறார். கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்று மீண்டும் அதிபராக அறிவிக்கப்பட்டார். இதனால் எதிர்க்கட்சி சார்பில் நாடு முழுவதும் கடந்த 1 மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐரோப்பாவையும், ரஷியாவையும் பிரிக்கும் எல்லை நாடாக உள்ளதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக பெலாரஸ் மாறியுள்ளது.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்கோவுக்கு ரஷியா ஆதரவளித்து வருகிறது. இருப்பினும் எதிர்க்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. பெலாரஸ் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க நேட்டோ படையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதால், பெலாரஸ் அதிபர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உதவியை நாடினார்.

belarus,russia,alexander lukashenko,protest ,பெலாரஸ், ரஷ்யா, அலெக்சாண்டர் லுகாஷென்கோ, எதிர்ப்பு

பெலாரஸ் அரசுக்கு ராணுவ ரீதியிலான உதவிகள் வழங்க தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்ததால், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷிய படைகளுக்கும் மோதும் களமாக பெலாரஸ் மாறலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகான்ஷென்கோ பேட்டி அளித்தபோது, நான் பெலாரஸ் அதிபராக சற்று அதிககாலம் பதவியில் இருந்திருக்கலாம். ஆனால் என்னால் மட்டுமே பெலாரசை பாதுகாக்கமுடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், நான் பெலாரசை 25 ஆண்டுகளுக்கு மேலாக கட்டமைத்துள்ளேன். நான் சாதாரணமாக விலகமாட்டேன். எனது பதவியையும் விட்டுத்தரமாட்டேன். நான் பதவியைவிட்டு வெளியேறினேன் என்றால் எனது ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுவிடுவார்கள். ஒருவேளை பெலாரஸ் அரசு இன்று தோல்வியடைந்தால் அடுத்து ரஷியா தான். ரஷியா மிகவும் வளமிக்கது. இதுபோன்ற போராட்டங்கள் நிறைந்த சூழ்நிலையை சமாளித்துவிடும் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது தவறு என்று கூறினார்.

Tags :
|