Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்கினால் உறவு பாதிக்கப்படும்

ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்கினால் உறவு பாதிக்கப்படும்

By: Nagaraj Fri, 03 Mar 2023 11:47:07 PM

ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்கினால் உறவு பாதிக்கப்படும்

டெல்லி: பாதிப்பை ஏற்படுத்தும்... ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்கினால், அது இருதரப்பு உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று இந்தியா வந்தார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து, உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தார்.

இதற்கிடையே சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ரஷியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாகவும், அது இருதரப்பு உறவுகளுக்கு பாதிப்பதுடன் விளைவுகளை ஏற்படுத்தும், என்றும் கூறினார்.

blinken,china,russia,working, ,ஆயுதம், இந்தியா, பிளிங்கன், ரஷியா

செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து அவர் கூறியது, உக்ரைனில் ரஷியா ஆக்கிரமிப்புக்கு சீனா ஆதரவளித்ததுடன், ரஷியாவுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.நான் சீனாவின் மூத்த வெளியுறவுக் கொள்கை அதிகாரி வாங் யியைப் பார்த்தபோது.

ரஷியாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு சீனர்கள் பரிசீலித்து வருகின்றனர்.என்ற தகவல் குறித்து அவரிடம் எங்களின் கவலையை தெரிவித்தேன். இது இருதரப்பு உறவில் கடுமையான பிரச்சனையாக இருக்கும் என்றும், விளைவுகள் ஏற்படும் என்றும் கூறியதாகவும் தெரிவித்தார்

Tags :
|
|