Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன் - ஜோ பிடன்

நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன் - ஜோ பிடன்

By: Karunakaran Sat, 24 Oct 2020 3:39:05 PM

நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன் - ஜோ பிடன்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறையவில்லை. பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இன்னும் பல முன்னணி நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மருந்துகள் சோதனைக் கட்டத்தில் தான் இருக்கின்றன. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும்?, எப்போது பயன்பாட்டிற்கு வரும்? என கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியானது அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் தலைவர்கள் அறிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் வரும் 3-ஆம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்கவுள்ளது.

us election,president,corona virus,joe biden ,அமெரிக்க தேர்தல், ஜனாதிபதி, கொரோனா வைரஸ், ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தனது பிரச்சாரத்தின்போது பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனால், அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், குடியரசுக் கட்சி ஆட்சியில் அதிபராக இருப்பவர் வைரசை எதிர்த்துப் போராடுவதை கைவிட்டுவிட்டார். மேலும் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன் என்று கூறினார்.

மேலும் அவர், கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். மக்கள் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி இலவசமாக தடுப்பூசி போடப்படும். செலவினங்களுடன் போராடும் மக்களுக்கு உதவி செய்வோம் என்று தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி வரும் வாரங்களில் தயாராக இருக்கும். அதை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என அதிபர் டிரம்பும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :