Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராகுலும், பிரியங்காவும் பிரச்சாரம் செய்தால் எங்களுக்குதான் லாபம்... சொல்கிறார் முதல்வர் பசவராஜ்

ராகுலும், பிரியங்காவும் பிரச்சாரம் செய்தால் எங்களுக்குதான் லாபம்... சொல்கிறார் முதல்வர் பசவராஜ்

By: Nagaraj Thu, 27 Apr 2023 1:22:11 PM

ராகுலும், பிரியங்காவும் பிரச்சாரம் செய்தால் எங்களுக்குதான் லாபம்... சொல்கிறார் முதல்வர் பசவராஜ்

கர்நாடகா: எங்களுக்குதான் லாபம்... காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியும் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் செய்தால் பா.ஜ.க.வுக்குதான் லாபம் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

ராகுல் மற்றும் பிரியங்கா பிரசாரத்துக்கு சென்ற மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் தோல்வியைத்தான் தழுவியது. இந்த சூழ்நிலையில் அவ்விருவரும் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதை நாங்கள் வரவேற்கிறோம். அவர்கள் இருவரும் பிரசாரம் செய்தால் எங்களுக்குத்தான் ஆதாயம் என்றார் அவர்.

profit,karnataka,election,campaign,chief minister,bjp ,லாபம், கர்நாடகா, தேர்தல், பிரச்சாரம், முதல்வர், பாஜக

பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஏன் அடிக்கடி கர்நாடகத்துக்கு வந்து பிரசாரம் செய்கிறார்கள் என்று காங்கிரஸார் கேட்கின்றனர். ராகுலும் பிரியங்காவும் தேர்தல் பிரசாரத்துக்கு இங்கு வருவதை யாரும் தடுக்கவில்லை. அவர்கள் வந்தால் வரட்டும்.அதனால் ஆதாயம் பா.ஜ.க.வுக்குத்தான் என்றார் பொம்மை.
யமகனமராடி என்னுமிடத்தில் பா.ஜ.க. வேட்பாளர் பசவராஜ ஹண்ட்ரி என்பவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரசாரம் செய்த பொம்மை, “ மே 10 ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் வரலாறு நிறைந்ததாக இருக்கும். இரட்டை என்ஜின் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது. வளர்ச்சியை விரும்பும் மக்கள் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசு இருப்பதைத்தான் விரும்புவார்கள். இதை விரும்பாதவர்கள்தான் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதால்தான் கர்நாடகத்தில் 6,000 கி.மீ. சொலைக்கான சாலைப் பணிகள் ரூ.60,000 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெலகாவி-குடாச்சி ரயில் பாதை இரட்டை ரயில்பாதையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இரட்டை என்ஜின் ஆட்சி இருப்பதால்தான் கிஸான் சன்மான் திட்டத்தை செயல்படுத்த முடிந்தது” என்றார் அவர். மோடியின் பெயரை அமித்ஷா குறிப்பிடும்போதெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்க்கிறார்கள். பிரதமர் செல்லும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சி இருக்குமிடம் தெரியாமல் உள்ளது என்றும் கர்நாடக முதல்வர் பொம்மை குறிப்பிட்டார்.

Tags :
|