Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை .. பள்ளிக் கல்வித்துறை

அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை .. பள்ளிக் கல்வித்துறை

By: vaithegi Sat, 24 Dec 2022 10:21:27 AM

அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை   ..  பள்ளிக் கல்வித்துறை

சென்னை: சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது ... 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் பருவத் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், விடுமுறை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சில அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. இதையடுத்து அதில், 'எண்ணும் எழுத்தும் திட்டம் சார்பாக 1 முதல் 3-ம் வகுப்பு வரையில் கற்பிக்கும் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் 2.1.2023 முதல் 4.1.2023 வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எனவே இதன் காரணமாக, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து 5.1.2023 அன்று பள்ளிகள் திறக்கப்படும் எனவும், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு (6 முதல் 12-ம் வகுப்பு வரையில்) ஏற்கனவே அறிவித்தது போன்று 2.1.2023 அன்று பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

school education department,half year vacation , பள்ளிக் கல்வித்துறை,அரையாண்டு விடுமுறை


மேலும், எண்ணும் எழுத்தும் பயிற்சியில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். 4, 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைதந்து, 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள், இதர பொருட்கள் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்து பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனை அடுத்து தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில், அரையாண்டு விடுமுறை முடிந்து 2-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகள் நேரடி மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும, பாட ஆசிரியர்கள் மூலம் வீட்டுப்பாடங்கள் மற்றும் செய்முறை பதிவேடுகள் போன்றவற்றை செய்து பள்ளி திறக்கும் நாளில் கொண்டுவரச் சொல்லி அறிவுறுத்தலாம் எனவும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags :