Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும் ...முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும் ...முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

By: vaithegi Wed, 27 July 2022 12:02:59 PM

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும்  ...முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, பள்ளி மாணவ-மாணவர்களிடையே மனநல மற்றும் உடல்நல சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.

அதன்பின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விட வேண்டாம். நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும். உடல்நலனை மாணவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

m.k.stalin,students,self-reliance , மு.க.ஸ்டாலின் ,மாணவர்கள் ,தன்னம்பிக்கை

மேலும் உங்கள் அப்பாவாக, அம்மாவாக இருந்து சொல்கிறேன். நான் மாணவர்களிடம் உரையாடிய போது 5 பேரிடம் காலை உணவு சாப்பிட்டீர்களா என கேட்டேன். அதில் 3 பேர் காலை உணவு சாப்பிடவில்லை என கூறினர். நான் கூட கல்லூரிப் பருவத்தில் பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்று சாப்பிடாமல் செல்வேன்.

மாணவர்கள் யாரும் காலையில் சாப்பிடாமல் வரவே கூடாது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் திட்ட அரசாணைக்கு நேற்று கையொப்பமிட்டுள்ளேன் என அவர் கூறினார்.

Tags :