Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிறப்பு விகிதம் அதிகரிக்காவிடில் ஆபத்து... பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை

பிறப்பு விகிதம் அதிகரிக்காவிடில் ஆபத்து... பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை

By: Nagaraj Mon, 06 Mar 2023 11:03:40 PM

பிறப்பு விகிதம் அதிகரிக்காவிடில் ஆபத்து... பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை

ஜப்பான்: பிரதமரின் ஆலோசகர் எச்சரிக்கை... பிறப்பு விகிதாச்சாரத்தை அதிகரிக்காவிட்டால், ஜப்பான் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என அந்நாட்டு பிரதமரின் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.

கடந்தாண்டில் அங்கு 8 லட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில், 16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பிறப்பு விகிதாச்சாரத்தை விட இறப்பு விகிதாச்சாரம் இரட்டிப்பாகியுள்ளது.

maintenance,child,population,adviser,prime minister,notification ,பராமரிப்பு, குழந்தை, மக்கள் தொகை, ஆலோசகர், பிரதமர், அறிவிப்பு

மேலும், கடந்த 15 ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகை 35 லட்சம் குறைந்துள்ளது. இதே நிலை நீட்டித்தால், வருங்காலத்தில் இளைஞர் சக்தி வெகுவாக குறைந்து, வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் பொருளாதாரம் சீர்குழைந்துவிடும் என அஞ்சப்படுகிறது.

மக்கள் தொகையை அதிகரிக்க, தாய்மார்களுக்கு வழங்கப்படும் குழந்தை பராமரிப்பு செலவுகளை உயர்த்தப்போவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

Tags :
|