Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன பொருட்கள் புறக்கணிப்பால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் - குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை

சீன பொருட்கள் புறக்கணிப்பால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் - குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை

By: Karunakaran Mon, 22 June 2020 3:14:58 PM

சீன பொருட்கள் புறக்கணிப்பால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் - குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை

லடாக்கில் கடந்த 15-ஆம் தேதி இந்திய-சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சீனாவின் அத்துமீறிய செயலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய அரசை பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் சம்பவங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து சீனா நாட்டு அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன தயாரிப்புகள், செல்போன் செயலிகளை இந்தியா புறக்கணித்தால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும் என்ற தலைப்பில் அந்த பத்திரிகையில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

global times,chinese product,india,bilateral relations ,சீன பொருட்கள்,குளோபல் டைம்ஸ்,புறக்கணிப்பு, இந்திய உறவு

இதுகுறித்து அந்த பத்திரிகையில், இந்தியாவில் சீன பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் சீன நாட்டு பொருட்கள் வர்த்தகத்தில் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவில் சீன சந்தை விரிவாக்கத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கைகளால் இரு நாட்டு உறவுகள் மேலும் பாதிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், சீன பொருட்களின் விலை போன்ற வாடிக்கையாளர் நலன் சார்ந்த அம்சங்களால் இந்த கோஷங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை இருப்பதாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|