Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரானால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படுமா? - டிரம்ப் பதில்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரானால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படுமா? - டிரம்ப் பதில்

By: Karunakaran Thu, 30 July 2020 2:01:43 PM

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரானால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படுமா? - டிரம்ப் பதில்

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 8 மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை அழிக்க தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. இதனால் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்கா இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. அதன்படி, அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும் மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது.

corona vaccine,america,trump,corona virus ,கொரோனா தடுப்பூசி, அமெரிக்கா, டிரம்ப், கொரோனா வைரஸ்

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் பேட்டி அளித்தபோது, நம்மிடம் தடுப்பூசி இருந்தால் அது பிற நாடுகளுக்கும் வழங்கப்படும். வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருவது போல் தடுப்பூசியையும் நாங்கள் அனுப்பி வைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், நான் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை நம்புகிறேன். நான் அதை எடுத்துக் கொள்வேன். உங்களுக்கு தெரியும் நான் அதை 14 நாள் காலத்துக்கு எடுத்துக் கொண்டேன். நான் இங்கே இருக்கிறேன். எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. பல முன்னணி மருத்துவ ஊழியர்களும் அந்த மருந்தை நம்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

Tags :
|