Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காய்கறிகளின் விலை தொடர் உயர்வு .. இந்நிலை தொடர்ந்தால் வெங்காயம் ரூ.2000 வரை விற்கப்படுமாம்

காய்கறிகளின் விலை தொடர் உயர்வு .. இந்நிலை தொடர்ந்தால் வெங்காயம் ரூ.2000 வரை விற்கப்படுமாம்

By: vaithegi Sun, 23 July 2023 10:55:55 AM

காய்கறிகளின் விலை தொடர் உயர்வு ..  இந்நிலை தொடர்ந்தால் வெங்காயம் ரூ.2000 வரை விற்கப்படுமாம்

இந்தியா: இந்தியாவில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விளைச்சல் குறைந்த காரணத்தினால் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. அதனால் அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 1 கிலோ தக்காளியின் விலை ரூ. 250 வரை விற்கப்படுகிறது.

இதையடுத்து மற்ற மாநிலங்களில் தொடர்ந்து தமிழகத்திலும் தக்காளியின் விலை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தற்போது 1 கிலோ தக்காளி ரூ. 120 முதல் 150 வரை விற்பனையாகி வருகிறது.

onions,vegetables ,வெங்காயம் ,காய்கறி

தக்காளி மட்டுமல்ல கேரட், பீன்ஸ், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் எகிறி உள்ளது. தக்காளியை தொடர்ந்து வெங்காயம் ஒரு கிலோ ரூ. 200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் பொருளாதார ரீதியான எதிர்கொள்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் 2 வருடங்களுக்கு பிறகு ஒரு கிலோ வெங்காயத்தை ரூ. 2000 கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags :
|