Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் - ஜோ பைடன்

டிரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் - ஜோ பைடன்

By: Karunakaran Thu, 08 Oct 2020 3:47:46 PM

டிரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் - ஜோ பைடன்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடந்த மாதம் 29-ந்தேதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது. அதில் கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதார சரிவு போன்ற பல பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதன்பின், ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட டிரம்ப் 4 நாட்களுக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். தற்போது, டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையிலான 2-வது நேரடி விவாதம் வருகிற 15-ந்தேதி புளோரிடா மாகாணத்தில் நடக்க இருக்கிறது.

trump,corona virus,argue,joe biden ,டிரம்ப், கொரோனா வைரஸ், வாதிடுகிறார், ஜோ பிடன்

இந்த சந்திப்பு குறித்து நேற்று ஜோ பைடன் பேட்டி அளிக்கையில், ஜனாதிபதி டிரம்பின் தற்போதைய உடல்நலம் குறித்த தகவல் என்னிடம் இல்லை. அவருக்கு இன்னும் கொரோனா தொற்று இருந்தால் விவாதம் நடக்கக்கூடாது. பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. நான் தொடர்ந்து மருத்துவரின் வழிகாட்டுதலின்படி நடந்து வருகிறேன் என்று கூறினார்.

மேலும் அவர், டிரம்புடன் விவாதிக்க நான் ஆவலாக இருக்கிறேன். ஆனால் எல்லா நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவித்தார். அதேசமயம் தான் நலமாக இருப்பதாகவும் நேரடி விவாதத்துக்கு தயாராக உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|