Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயிலில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து பின் ரத்து செய்தால் ரத்து கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வசூல் .. மத்திய அரசு

ரயிலில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து பின் ரத்து செய்தால் ரத்து கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வசூல் .. மத்திய அரசு

By: vaithegi Wed, 31 Aug 2022 10:32:19 AM

ரயிலில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து பின் ரத்து செய்தால் ரத்து கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வசூல்  ..  மத்திய அரசு

இந்தியா: இந்திய ரயில்வேயில் ரயிலில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து அதற்கு பின்னர் ரத்து செய்தால் ரத்து கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இந்திய ரயில்வேயின் ரயில்கள் பல வழித்தடங்களில் செயல்பட்டு கொண்டு வருகின்றன. ரயில் பயணம் செய்வோர் அவரவர் வசதிக்கேற்ப முதல் வகுப்பு, ஏசி படுக்கை, ஸ்லீப்பர் என்று முன்பதிவு செய்கின்றனர்.

இதனை அடுத்து இந்த நிலையில் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே அதன்படி, ரயில்களில் முதல் வகுப்பு, ஏசி படுக்கை ஆகியவற்றில் முன்பதிவு செய்து பின் ரத்து செய்தால் ரத்து கட்டணத்திற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

central govt.,train tickets , மத்திய அரசு , ரயில் டிக்கெட்டுகள்

பொதுவாக ரயில் டிக்கெட் கேன்சல் செய்தால் கட்டிய தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை ரத்து கட்டணமாக கணக்கிடப்பட்டு மீத தொகை வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இனி ரத்து கட்டணத்துடன் கூடுதலாக 5 சதவீதம் வாடிக்கையாளரின் டிக்கெட் முன்பதிவு கட்டணத்திலிருந்து கழிக்கப்படும். என்வே இது பயணிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனை தொடரந்து மேலும் விமானங்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் முன்பதிவு செய்து ரத்து செய்தால் 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :