Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்கிறீர்களா... அப்போ ஜிஎஸ்டியும் சேர்த்து பிடிக்கப்படும்

முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்கிறீர்களா... அப்போ ஜிஎஸ்டியும் சேர்த்து பிடிக்கப்படும்

By: Nagaraj Tue, 30 Aug 2022 11:56:38 PM

முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்கிறீர்களா... அப்போ ஜிஎஸ்டியும் சேர்த்து பிடிக்கப்படும்

புதுடெல்லி: ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்து விட்டால் ஜிஎஸ்டி தொகையுடன் சேர்த்து ரத்து கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம் பயணிகளின் தேவைக்காக அவ்வப்போது கூடுதல் சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் பண்டிகை தினங்களில் கூடுதல் சலுகைகளுடன் சிறப்பு ரயில் சேவைகளும் அறிமுகம் செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு திரும்ப நினைப்பவர்கள் அல்லது நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புவர்கள் முன்கூட்டியே ரயில் இருக்கைக்காக முன்பதிவு செய்து விடுகிறார்கள்.


ஆனால் கடைசி நேரத்தில் போக முடியாது சூழல் ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து பயணிகளுக்கு இருக்கை உறுதி செய்யப்பட்ட பிறகு டிக்கெட்களை ரத்து செய்ய நேரிட்டால் இந்திய ரயில்வே அதற்கான ரத்து கட்டணத்தை வசூலிக்கிறது. இந்நிலையில் இந்திய அமைச்சகத்தின் வரி ஆராய்ச்சி பிரிவின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

train ticket,cancellation fee,notification,gst,admin ,
ரயில் டிக்கெட், ரத்து கட்டணம், அறிவிப்பு, ஜிஎஸ்டி, நிர்வாகம்

அதில், ரயில் டிக்கெட் அல்லது ஹோட்டல்களில் முன்பதிவு செய்து அதனை ரத்து செய்து விட்டால் ஜிஎஸ்டி தொகையுடன் சேர்த்து ரத்து கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரத்து கட்டணம் பயணிகள் எந்த வகுப்பில் பயணம் செய்ய முன் பதிவு செய்கிறாரோ அதற்கு ஏற்றார் போல மாறுபடும். அதாவது முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பேட்டிகளில் முன் பதிவு செய்திருந்தால் 5% ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனைப் போல ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்தில் முன்பாகவே ஏசி முதல் வகுப்பு அல்லது ஏசி எக்சிகியூட்டிவ் வகுப்பு டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பயணிகளிடம் இருந்து ரூ.240 வசூல் செய்யப்படுகிறது.


மேலும் ஏசி 2 அடுக்கு டிக்கெடுகளை 48 மணி நேரத்தில் முன்பு ரத்து செய்தால் ரூ.200 மற்றும் ஏசி-3 அடுக்கு டிக்கெடுகளுக்கு ரூ.180 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :
|