Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டூத்பிரஷ் ஆர்டர் கொடுத்தா வந்தது என்னவோ மசால் பாக்கெட்டுகள்

டூத்பிரஷ் ஆர்டர் கொடுத்தா வந்தது என்னவோ மசால் பாக்கெட்டுகள்

By: Nagaraj Tue, 14 Feb 2023 9:52:15 PM

டூத்பிரஷ் ஆர்டர் கொடுத்தா வந்தது என்னவோ மசால் பாக்கெட்டுகள்

புதுடில்லி: டூத்பிரஷ் ஆர்டர் கொடுத்தா வந்தது என்னவோ மசால் பாக்கெட்டுகள்தாங்க. அமேசானில் ரூ.12,000 மதிப்புள்ள டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண் பெண்ணிற்கு மசாலா பாக்கெட்டுகள் அடங்கிய பெட்டிகள் வந்துள்ளது.

அண்மை காலமாக ஆன்லைன் விற்பனையாளர்களால் பலதரப்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். தான் ஆர்டர் செய்த பொருள் ஒன்றாக இருக்கையில் அவர்களது கையில் கிடைக்கக்கூடிய பொருள் மற்றொன்றாக உள்ளது.

இதனால் ஏமாற்றமடையும் மக்கள், சம்பந்தப்பட்ட நிறுவன செயலில் பல புகார்களை அளித்து வருகின்றனர். அந்த வகையில் அமேசான் ஆன்லைன் ஸ்டோரில், எலக்ட்ரிக் டூத் பிரஷ்ஷை ஆர்டர் செய்த பெண்ணிற்கு மசாலா பாக்கெட்டுகள் அடங்கிய பெட்டிகள் வந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

masala packet,company,photo,amazon,products ,மசாலா பாக்கெட், நிறுவனம், புகைப்படம், அமேசான், பொருட்கள்

சமீபத்தில் பெண் ஒருவர் ரூ.12,000 மதிப்புள்ள ஓரல்-பி எலக்ட்ரிக் டூத் பிரஷ்ஷை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு எம்டிஎச் மசாலாவின் நான்கு பெட்டிகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் மகள் அவரது ட்விட்டர் பக்கத்தில் “தனது தாயார் ‘கேஷ் ஆன் டெலிவரி’ மூலம் டூத் பிரஷ்ஷை ஆர்டர் செய்ததாகவும், பார்சலில் சந்தேகம் வந்ததால் பணத்தைக் கொடுப்பதற்கு முன்பு அதைத் திறந்ததாகவும்” கூறினார்.

அவர் ட்விட்டரில் மசாலா பெட்டிகளின் புகைப்படத்தை பகிர்ந்து , “அன்புள்ள அமேசான் இந்தியா, ஒரு வருடத்திற்கும் மேலாக பொருட்களை வாங்குபவர்களை ஏமாற்றி வரும் விற்பனையாளரை நீங்கள் ஏன் பணி நீக்கம் செய்யவில்லை?” என்று நிறுவனத்தை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார்.

Tags :
|
|