Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயர் கல்வி தரவரிசை பட்டியல்.. தொடர்ந்து 4வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்..

உயர் கல்வி தரவரிசை பட்டியல்.. தொடர்ந்து 4வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்..

By: Monisha Fri, 15 July 2022 8:18:44 PM

உயர் கல்வி தரவரிசை பட்டியல்.. தொடர்ந்து  4வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்..

சென்னை: இந்திய உயர்கல்வி தரவரிசை பட்டியல் 2022-ல் ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐஐடி தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது.

நாட்டில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்வி, பல்கலைக்கழகம், மருத்துவத் துறை, கட்டடக் கலை, பல் மருத்துவம், அடல் கண்டுபிடிப்பு என 11 பிரிவுகளின் கீழ் 2022 தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

chennai,ranks,iit,education ,உயர் கல்வி, தரவரிசை ,பட்டியல்,ஐஐடி,

இந்த ஆண்டு தரவரிசைக்கு, மொத்தம் 4,030 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 259 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.இந்த 4030 தனித்துவ நிறுவனங்களிடம் இருந்து பொறியியல், மருத்துவம் என பல்வேறு பிரிவுகள் கீழ் 7254 விண்ணப்பங்கள் தரவரிசைக்குப் பெறப்பட்டன.

ஒட்டுமொத்த பிரிவிலும் பொறியியலிலும் சென்னை ஐஐடி தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது.

Tags :
|
|