Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உடனடி மனிதாபிமான உதவி... ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம்

உடனடி மனிதாபிமான உதவி... ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம்

By: Nagaraj Sat, 18 Nov 2023 6:10:24 PM

உடனடி மனிதாபிமான உதவி...  ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம்

நியூயார்க்:மனிதாபிமான உதவி... இஸ்ரேல் -ஹமாஸ் போர் நீடிக்கும் நிலையில் காசாவில் உடனடி மனிதாபிமான உதவிக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி எல்லை தாண்டி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது. வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது. இதனிடையே காசாவுக்கு நிவாரண உதவிகள் தடையின் கொண்டு செல்லவும், இஸ்ரேல் ஹமாஸ் இடையே மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் கோரி ஜோர்டன் அரசு சார்பில் அக்டோபர் 27ம் தேதி ஐநாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

aid,gaza,humanitarian,implementation,resolution,security-council,un, ,உதவி, ஐநா, காசா, தீர்மானம், நிறைவேற்றம், பாதுகாப்பு கவுன்சில், மனிதாபிமானம்

இந்த தீர்மானம் மீது 193 உறுப்பினர்களை கொண்ட ஐநா சபையில் நடந்த வாக்கெடுப்பில் தீர்மானம் வெற்றி அடைந்தது.

இந்நிலையில் காசாவில் உடனடியாக நிவாரண உதவிகள் தடையின்றி சென்று சேரவும் ஹமாஸ் படையினர் நிபந்தனையின்றி பணயக் கைதிகளை விடுவிக்கவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

15 உறுப்பினர்களை கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 12 உறுப்பினர் நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து நாடுகள் இந்த தீர்மானத்தை புறக்கணித்துள்ளன.

Tags :
|
|
|