Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தகுதி அடிப்படையில் குடியேற்ற முறை; அதிபர் டிரம்பின் முயற்சிக்கு எதிர்ப்பு

தகுதி அடிப்படையில் குடியேற்ற முறை; அதிபர் டிரம்பின் முயற்சிக்கு எதிர்ப்பு

By: Nagaraj Mon, 13 July 2020 11:49:31 AM

தகுதி அடிப்படையில் குடியேற்ற முறை; அதிபர் டிரம்பின் முயற்சிக்கு எதிர்ப்பு

அதிபர் டிரம்ப்-ன் புதிய திட்டம்... அமெரிக்காவில் தகுதி அடிப்படையிலான குடியேற்ற முறையைக் கொண்டு வருவதற்கான பணியில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறாராக இருக்கும்போது அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது, வலிமையான எல்லைப் பாதுகாப்பு, தகுதியுடையோருக்கு விசா வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய சட்ட மசோதா கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

trump,the effort,the bill,the people,the opposition ,டிரம்ப், முயற்சி, மசோதா, மக்கள், எதிர்ப்பு

இதற்கான ஆணை பிறப்பிப்பதற்காக நாடாளுமன்றத்துடன் இணைந்து அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருகிறார். தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த டிரம்ப், ஒரு பெரிய மசோதாவைத் தயாரித்து வருவதாகவும், அதைக் கொண்டுவந்தால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த முயற்சிக்கு அவர் சார்ந்த குடியரசுக் கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்பின் செயல் தவறான நடவடிக்கை என செனட் உறுப்பினர் டெட் குரூஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
|