Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் நாட்டுக்கோழி; ராமநாதபுரத்தில் அதிக விற்பனை

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் நாட்டுக்கோழி; ராமநாதபுரத்தில் அதிக விற்பனை

By: Nagaraj Thu, 06 Aug 2020 07:34:37 AM

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் நாட்டுக்கோழி; ராமநாதபுரத்தில் அதிக விற்பனை

கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க, ராமநாதபுரத்தில் சளி, இருமலை விரட்டும் நாட்டுக்கோழியை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

கொரோனா உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களை எளிதாக தாக்குகிறது. இதனை தவிர்க்க சத்தான உணவுகளை சாப்பிட சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. பழங்கள், காய்கறி, இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது. சளி, இருமலை விரட்ட நாட்டுக்கோழிக் கறியை விரும்பி வாங்குகின்றனர்.

turkey,immunity,colds,coughs,over-selling ,நாட்டுக்கோழி, நோய் எதிர்ப்பு சக்தி, சளி, இருமல், அதிக விற்பனை

இதுகுறித்து உச்சிபுளி வியாபாரி மகாலிங்கம் கூறுகையில், 'ராமநாதபுரம் டவுனில் புதன்தோறும் கோழிச்சந்தை நடக்கிறது. ஊரடங்கால் 3 மாதத்திற்கு பின் சில வாரமாக சந்தை நடக்கிறது. ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.450க்கும், பண்ணைக்கோழி ரூ.250க்கும் விற்கிறோம்.

மஞ்சள், மிளகு கலந்த நாட்டுக்கோழி சூப், குழம்பு சளி, இருமலை விரட்டும்.' இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நாட்டுக்கோழிகளை மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

Tags :
|
|
|