Advertisement

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமல்

By: vaithegi Fri, 15 Sept 2023 3:54:02 PM

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமல்

சென்னை: தமிழகத்தில் தேர்தலின் போது வாக்குறுதி அளித்த மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 எப்போது வழங்கப்படும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அரசு உரிய அறிவிப்பினை வெளியிட்டு முகாம்கள் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றது.

இதையடுத்து அதன் அடிப்படையில் சுமார் 1 கோடியே 6 லட்சம் பேர் உதவித்தொகை பெற தேர்வாகி உள்ளனர். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு முதல் கட்டமாக அவர்களின் வங்கி கணக்கில் ரூ. 1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது.

entitlement,female ,உரிமைத்தொகை ,மகளிர்

அதன் பிறகு பலருக்கும் ரூ.1000 நேற்றைய தினமே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதும். மேலும் அறிவித்தபடி இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். பயனாளிகளுக்கு பிரத்யேக ATM Cardம் வழங்கப்பட்டது. உரிமைத்தொகை பெற்றதையடுத்து குடும்ப தலைவிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். திட்டத்தை செயல்படுத்தியதற்கு அரசுக்கு தங்களது நன்றியையும் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து அரசின் இந்த திட்டம் பெண்கள் தங்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தி கொள்ள உதவிகரமாக உள்ளது. அதே போன்று தான் மகளிர் இலவச பயண திட்டத்தில் இன்றைக்கு பணிக்கு செல்லும் பல பெண்கள் பயணத்திற்கான டிக்கெட் கட்டண செலவை சேமிப்பாக மாற்றி உள்ளனர்.

Tags :