Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு நடைமுறை அமல்

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு நடைமுறை அமல்

By: vaithegi Mon, 08 May 2023 11:15:39 AM

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு நடைமுறை அமல்


சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர் சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட சொகுசு வசதிகளை கொண்ட சுமார் 1078 பேருந்துகள் இயக்கப்பட்டு கொண்டு வருகின்றன. இவை 251 வழித்தடங்களில் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்பட்ட நீண்ட தூர பயணம் மேற்கொண்டு வருகின்றன. பெண்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில் ஏற்கனவே 2 இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த இருக்கைகள் தற்போது 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெண்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில் ஏற்கனவே 2 இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 4 இருக்கைகள் தற்போது ஒதுக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார்.

seats,govt express buses ,இருக்கைகள் ,அரசு விரைவு பேருந்துகள்

எனவே அதன்படி படுக்கை வசதி உள்ள பேருந்தில் 4 படுக்கைகளும் , இருக்கை மட்டும் உள்ள பேருந்தில் நான்கு இருக்கைகளும், இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள பேருந்தில் 2 இருக்கை, 2 படுக்கைகளும் பெண்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி மூலமாக இதனை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பெண்களுக்கான இருக்கைகள் மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும். முன்பதிவு செய்யாத பட்சத்தில் மற்ற பயணிகளுக்கு ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|