Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு

தமிழக வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு

By: vaithegi Wed, 06 July 2022 7:41:22 PM

தமிழக வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் வெளியீடு

சென்னை: சென்னையில், தலைக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் மிக அதிகமான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படுவது குறித்தும், இருசக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கையில் அமர்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

motorcycles,helmets ,இருசக்கர வாகனங்கள்,தலைக்கவசம்

மேலும் இந்த கையெழுத்து முகாமில், தலைக்கவசம் கட்டாயம் அணிவோம் என உறுதிமொழி மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கையெழுத்திட்டனர்.அத்துடன், காவல் ஆணையர் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் கூறி, இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கினார். இந்த விழிப்புணர்வு முகாம் தொடர்ந்து 5 நாட்கள், 5 முக்கிய சிக்னல் சந்திப்புகளில் நடத்தப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.

மேலும் சென்னையில் கடந்த 23.05.2022 முதல் 05.07.2022 வரையில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த 72,744 பேர் மீதும், பின்னிருக்கையில் தலைக்கவசம் அணியாமல் வந்த 63,912 நபர்கள் மீதும் என மொத்தம் 1,36,656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூபாய் 1,36,65,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :