Advertisement

CBSE ... தேர்வு கால அட்டவணை குறித்த முக்கிய தகவல்

By: vaithegi Tue, 06 Dec 2022 2:46:49 PM

CBSE ...  தேர்வு கால அட்டவணை குறித்த முக்கிய தகவல்

சென்னை: இந்தியாவில் 2 வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் தான் வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் மாணவர்களுக்கு சரியான முறையில் பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

எனவே அதன்படி மத்திய கல்வி வாரியம் ஆன CBSE, 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு 2023 பிப்ரவரி மாதம் 15ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்துள்ளது.

cbse exam time table ,CBSE ,தேர்வு கால அட்டவணை

இதனை அடுத்து தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வுக்கான கால அட்டவணை எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வகுப்பு மற்றும் பாட வாரியாக தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இதையடுத்து மாணவர்கள் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags :