Advertisement

TNPSC Group 1 கலந்தாய்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு

By: vaithegi Wed, 20 July 2022 1:19:33 PM

TNPSC Group 1 கலந்தாய்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு

இந்தியா: துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 1 முதல்நிலைத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தியது.

கொரோனா பரவல் காரணமாக முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை, முதன்மைத் தேர்வு (எழுத்துத் தேர்வு) நடைபெற்றது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் ஜூலை மாதம் 13 முதல் 15 ஆம் தேதி வரை சென்னையில் நடத்தப்பட்டது.

consultation,tnpsc group 1 ,கலந்தாய்வு ,TNPSC Group 1

இதை அடுத்து இதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை அதிகாரபூர்வ தளத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. மேலும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in பக்கத்தில் தேர்வு முடிவுகளை சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் TNPSC குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது வரும் 29ம் தேதி அன்று ஆணைய குழு அலுவலகத்தில் காலை 9 மணி அளவில் நடைபெறும் கலந்தாய்வில் தேர்வர்கள்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :