Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து செப் 1 முதல் முக்கிய நடைமுறை அமல்

அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து செப் 1 முதல் முக்கிய நடைமுறை அமல்

By: vaithegi Mon, 28 Aug 2023 4:01:44 PM

அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து செப் 1 முதல் முக்கிய நடைமுறை அமல்

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், 1 முதல் 3- ஆம் வகுப்பு வரை மாணவர்களின் மேம்பாட்டிற்கு அரசு எண்ணும் எழுத்தும் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இத்திட்டம் 8 வயது வரை குழந்தைகள் எழுத படிக்க வேண்டும் என்பதற்காக அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 3 நிலைகள் உள்ளன.

முதல் நிலையை ’அரும்பு’ என்றும், இரண்டாம் நிலையை ’மொட்டு’ என்றும், மூன்றாம் நிலையில் ’மலர்’ என்றும் அழைக்கின்றனர். மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப கற்றல் படிநிலைகளில் மாணவர்கள் இடம்பிடிப்பர்.

numeracy programme,government schools ,எண்ணும் எழுத்தும் திட்டம் ,அரசுப் பள்ளிகள்

இதனை அடுத்து இத்திட்டம் 2023-24 ஆம் கல்வியாண்டில் 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 35 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிறப்பு செயல்பாடுகள் மூலம் படித்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் செப்.1 முதல் செப். 15 வரை இந்த திட்டம் குறித்து களஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இத்திட்டம் மாணவர்களுக்கு எந்த அளவிற்கு பலன் தருகிறது என்பதை அறியும் வகையில் மொபைல் ஆப் ஒன்றை SCERT தயாரித்து உள்ளது. எனவே அதன் மூலம் திட்டத்தின் பலன்களை மதிப்பாய்வு செய்ய இருக்கின்றனர்.

Tags :