Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்திர பிரதேசம் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய விதிமுறைகள் அமல்

உத்திர பிரதேசம் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய விதிமுறைகள் அமல்

By: vaithegi Sat, 02 Sept 2023 2:18:09 PM

உத்திர பிரதேசம் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய விதிமுறைகள் அமல்

உத்திர பிரதேசம்: ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களது விவரங்களை புதுப்பிக்க அறிவுறுத்தல் ...ரேஷன் அட்டைகள் மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களுக்கான பல நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. முன்னதாக ரேஷன் அட்டைகள் மூலமாக சம்பந்தப்பட்ட நபர்களை தவிர மற்றவர்கள் பயன்பெற வாய்ப்புகள் இருந்தது.

எனவே இதனை தவிர்க்கும் விதமாக அரசு பயனர்களின் பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்தது. இதனால் குடும்பத்தில் உள்ள நபர்கள் மட்டுமே ரேஷன் அட்டைக்கான பயன்களை பெற முடியும். தற்போது உத்திரப்பிரதேச அரசு ரேஷன் அட்டைதாரர்களின் பயோமெட்ரிக் விபரங்களை சரி பார்ப்பதற்காக உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து இதற்காக 15 கோடி பயனாளர்களுக்கும் இ கே ஒய் சி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரேஷன் கடைகளில் இ பி ஓ எஸ் இயந்திரம் வைக்கப்பட்டு உள்ளது.

rules,regulations,ration card holders ,விதிமுறைகள் ,விதிமுறைகள் ,ரேஷன் அட்டைதாரர்கள்

இதன் மூலமாக பயனர்களின் பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக உத்தரப்பிரதேச அரசு 6 மாதங்கள் அவகாசம் அளித்து உள்ளது. மேலும் இந்த இ பி ஓ எஸ் இயந்திரம் ஆனது எடை இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக ரேஷன் அட்டைக்கான உணவு ஒதுக்கீடு தானியங்கியாக அளவிடப்பட்டு ரசீதுடன் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

இப்புதிய விதிமுறைகளின் மூலம் ரேஷன் அட்டைகளை தவறாக பயன்படுத்துபவர்கள் மற்றும் கள்ளச் சந்தைகளில் ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது போன்ற முறைகேடுகள் அனைத்தும் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|