Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறினால் சிறை; அவசர சட்டம் கொண்டு வர முடிவு

கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறினால் சிறை; அவசர சட்டம் கொண்டு வர முடிவு

By: Nagaraj Fri, 24 July 2020 2:18:17 PM

கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறினால் சிறை; அவசர சட்டம் கொண்டு வர முடிவு

அவசர சட்டம் கொண்டு வர முடிவு... ஜார்கண்ட் மாநிலத்தில் கொரொனா தடுப்பு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறினால், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் அவசர சட்டம் கொண்டு வர மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால் பல மாநிலங்களிலும் மக்கள் அலட்சிய மனநிலையுடன் நடந்து கொள்கின்றனர்.

public places,emergency law,penalty,chief minister,jharkhand ,பொது இடங்கள், அவசர சட்டம், தண்டனை, முதல்வர், ஜார்கண்ட்

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் கொரொனா தடுப்பு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறினால், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை மீறுதல், அலுவலகங்கள் மற்றும் கடைகளில் விதிகளை மீறி கூட்டமாக திரளுதல் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புதல் ஆகிவற்றுக்கு இந்த தண்டனை விதிக்கப்படும் என முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

இதுவரை இவற்றுக்கான தண்டனை சட்டம் எதுவும் இல்லாததால், தவறு செய்பவர்களை தண்டிக்க இயலாமல் போய் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags :