Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இன்னும் 2 வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் - மாநகராட்சி ஆணையர்

சென்னையில் இன்னும் 2 வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் - மாநகராட்சி ஆணையர்

By: Monisha Mon, 01 June 2020 1:12:03 PM

சென்னையில் இன்னும் 2 வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் - மாநகராட்சி ஆணையர்

சென்னையில் நேற்று ஒரே நாளில் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது. 7,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129-ஆக உள்ளது.

இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

madras,corona virus,municipal commissioner,extreme action,special camps ,சென்னை,கொரோனா வைரஸ்,மாநகராட்சி ஆணையர்,தீவிர நடவடிக்கை,சிறப்பு முகாம்கள்

சென்னையில் இன்னும் 2 வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கவே மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை நீடிக்கிறது.

சென்னையில் கட்டுப்பாடு விலக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் புதிய தொற்று பாதிப்பு இல்லை. தளர்வுகள் அதிகரிக்கும் போது நோய் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து வியூகம் வகுக்கப்படுகிறது. தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும்.

சென்னையில் விதிகளை பின்பற்றாத சலூன் கடைகளை 4 மாதங்களுக்கு திறக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|