Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்னும் 2 வாரங்களில் டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும் .. பொதுமக்களே எச்சரிக்கை

இன்னும் 2 வாரங்களில் டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும் .. பொதுமக்களே எச்சரிக்கை

By: vaithegi Fri, 14 Apr 2023 11:42:29 AM

இன்னும் 2 வாரங்களில் டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும் ..  பொதுமக்களே  எச்சரிக்கை

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் டெல்லியில் இயங்கி வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 1,149 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஒருவர் உயிரிழந்து இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து இது பற்றி டெல்லி எல்.என்.ஜே.பி. மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சுரேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் டெல்லியில் 2 ஆயிரம் படுகைகளை கொண்ட பெரிய மருத்துவமனை இருப்பதாகவும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

warning,delhi,corona ,எச்சரிக்கை , டெல்லி,கொரோனா

இந்த நிலையில் பிறந்த 18 நாள் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அது தவிர 4 குழந்தைகள் சிகிச்சையில் இருக்கின்றனர்.மேலும் இது குறித்து டெல்லி எல்.என்.ஜே.பி. மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சுரேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

டெல்லியில் 2 ஆயிரம் படுகைகளை கொண்ட பெரிய மருத்துவமனை இருப்பதாகவும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிறந்த 18 நாள் குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அது தவிர 4 குழந்தைகள் சிகிச்சையில் இருக்கின்றனர் என அவர் கூறினார்.

Tags :
|