Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர் விடுமுறை .. சென்னையில் இருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 938 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறை .. சென்னையில் இருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 938 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Sat, 01 Oct 2022 6:38:36 PM

தொடர் விடுமுறை  ..   சென்னையில் இருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 938 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சிறப்பு பேருந்துகள் இயக்கம் ... தமிழக பள்ளிகளில் நேற்று (செப் 30) முதல் காலாண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தசரா பண்டிகைகள் வருவதால் தொடர் விடுமுறை வர இருக்கிறது.

அதனால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்ய பலர் திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை பேருந்து நிலையங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு இருக்கின்றனர். மேலும் பலர் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

special buses,series holiday,chennai ,சிறப்பு பேருந்துகள்,தொடர் விடுமுறை ,சென்னை

இதனை அடுத்து இந்த நிலையில் இன்று பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 938 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.மேலும் நேற்று சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 2,844 பேருந்துகளில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 200 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இனி வரும் நாட்களில் கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பேருந்துகள் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என அரசு எச்சரித்துள்ளது.

Tags :