Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 20,647 பேர் கொரோனாவால் பாதிப்பு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 20,647 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Tue, 16 June 2020 4:37:57 PM

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 20,647 பேர் கொரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களிள் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 லட்சத்து 78 ஆயிரத்து 877 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4 லட்சத்து 37 ஆயிரத்து 486 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளது. இந்நிலையில் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,88,271 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பிரேசில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

brazil,coronavirus,health department,death ,பிரேசில்,கொரோனா வைரஸ்,சுகாதாரத்துறை,பலி

பிரேசிலில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 20,647 பேர் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,88,271 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு நேற்று மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 43,959 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆறுதல் தரும் விதமாக பிரேசிலில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக பிரேசிலில் பெரும் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags :
|