Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசிலில் ஒரே நாளில் 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு

பிரேசிலில் ஒரே நாளில் 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Mon, 20 July 2020 10:12:42 AM

பிரேசிலில் ஒரே நாளில் 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு

பிரேசிலில் ஒரே நாளில் 28 ஆயிரத்து 352 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை 205க்கும் அதிகமான உலக நாடுகளுக்கு பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்று பாதிப்பில் 2ம் இடத்தில் உள்ள பிரேசிலில் ஒரே நாளில் 28,352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதனால் நாட்டின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 20 லட்சத்து 74 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. அதே போன்று கடந்த 24 மணி நேரத்தில் 921 பேர் கொரோனாவுக்கு பலியானதால், இறப்பு எண்ணிக்கை 78ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உலகில் 2 ஆவது நாடாக இருந்தாலும், பிரேசிலில் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் துவக்குவதில் அரசு தீவிரமாக உள்ளது.

corona,vulnerability,brazil,2nd place,38 thousand people ,கொரோனா, பாதிப்பு, பிரேசில், 2வது இடம், 38 ஆயிரம் பேர்

Tags :
|
|