Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசிலில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்தது

பிரேசிலில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்தது

By: Nagaraj Mon, 15 June 2020 08:20:21 AM

பிரேசிலில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்தது

கொரோனா தொற்றால் பிரேசிலில் பலியானோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.35 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

43 thousand,corona,impact,count,brazil ,43 ஆயிரம், கொரோனா, பாதிப்பு, எண்ணிக்கை, பிரேசில்

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,35,177 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரேசிலில் கொரோனா தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பிரேசிலில் கடந்த சில நாட்களாக 20 முதல் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.65 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.37 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

Tags :
|
|
|