Advertisement

கனடாவில் ஒரே நாளில் 424 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Sat, 08 Aug 2020 4:47:52 PM

கனடாவில் ஒரே நாளில் 424 பேர் கொரோனாவால் பாதிப்பு

கனடாவில் கடந்த ஒரே நாளில் 424 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 18ஆயிரத்து 985ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 970பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

canada,hospital,treatment,vulnerability,corona ,கனடா, மருத்துவமனை, சிகிச்சை, பாதிப்பு, கொரோனா

மேலும், ஆறாயிரத்து 580பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து மூவாயிரத்து 435பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, இரண்டு ஆயிரத்து 276பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|