Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

By: Monisha Wed, 22 July 2020 2:22:20 PM

சென்னையில் கொரோனாவுக்கு 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 4,965 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

chennai,corona virus,infection,death,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னையில் 88 ஆயிரத்து 377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,475 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

Tags :
|