Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் 20,271 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

சென்னையில் 20,271 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

By: Monisha Fri, 10 July 2020 1:13:12 PM

சென்னையில் 20,271 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,765 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 73,728 ஆக உள்ளது. இந்நிலையில் சென்னையில் தற்போது 20,271 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

tamil nadu,chennai,corona virus,infection,treatment ,தமிழ்நாடு,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 2,553
அண்ணா நகர் - 2,236
தேனாம்பேட்டை - 2,036
ராயபுரம் - 1,582
தண்டையார்பேட்டை - 1,522
திரு.வி.க. நகர் - 1,538
அம்பத்தூர் - 1,243
வளசரவாக்கம் - 1,051
அடையாறு - 1,263
திருவொற்றியூர் - 957
மாதவரம் - 712
மணலி - 369

Tags :