Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.60 வரை விற்பனை

சென்னையில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.60 வரை விற்பனை

By: vaithegi Mon, 05 Sept 2022 09:50:18 AM

சென்னையில்  ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.60 வரை விற்பனை

சென்னை: சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்கிறது. எனவே அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் ஆகிய பாதிப்புகள் ஏற்படும்போது, அதன் எதிரொலியாக காய்கறி வரத்திலும் பாதிப்பது இயல்பு.

இதையடுத்து அதன் படி தற்போது தக்காளி விலையில் இந்த பாதிப்பு எதிரொலித்து இருக்கிறது. இதனால் தக்காளியின் விலை 'மட மட' வென உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:- பொதுவாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 65 லாரிகள் வரை தக்காளி இறக்குமதி செய்யப்படுவது வழக்கம்.

tomato,chennai ,தக்காளி ,சென்னை

ஆனால் தற்போது அண்டை மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 40 முதல் 45 லாரிகள் வரை மட்டுமே சரக்குகள் வருகின்றன. இதனால் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.60 வரை விற்பனையாகிறது.

இதை அடுத்து அண்டை மாநிலங்களில் மழை நீடிக்கும் பட்சத்தில் தக்காளி விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Tags :
|