Advertisement

சென்னையில் மட்டும் 116 பேருக்கு கொரோனா பாதிப்பு.

By: vaithegi Tue, 11 Apr 2023 10:58:23 AM

சென்னையில் மட்டும் 116 பேருக்கு கொரோனா பாதிப்பு.

சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இதையடுத்து கடந்த வாரம் வரை தினமும் 200-க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 386 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இதில் சென்னையில் மட்டும் 116 பேர்களும், செங்கல்பட்டில் மட்டும் 33 பேர்களும் கோவையில் மட்டும் 18 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona,chennai ,கொரோனா ,சென்னை

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 4624 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்பதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 186 பேர் நேற்று ஒரே நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 2099 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர் என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் பலியாகியுள்ளார் என சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|