Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலையை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரிப்பு

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலையை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரிப்பு

By: vaithegi Sat, 01 July 2023 10:31:21 AM

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலையை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரிப்பு

சென்னை : சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாகவே விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவு காரணமாக 2 நாட்களில் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்தது. இதன் மூலம் 1 கிலோ தக்காளி ரூ.80லிருந்து ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர்.

மேலும் அத்துடன் தமிழக அரசால் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டு வந்தது. எனவே இதன் காரணமாக சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மொத்த விலையில் ரூ.50 ஆக குறைந்தது.

vegetable,tomato , காய்கறி,தக்காளி

இந்த நிலையில், நேற்று மீண்டும் உயர்ந்து ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் தக்காளி விலை மேலும் 15 ரூபாய் அதிகரித்து தற்போது ரூ. 90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லரை விற்பனை நிலையங்களில் ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து தக்காளி விலை உயர்வை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ் விலை ரூ. 110-க்கும், பாகற்காய் விலை ரூ. 60-க்கும், பச்சை மிளகாய் விலை ரூ.80-க்கும், பட்டாணி விலை ரூ. 180-க்கும், இஞ்சி விலை ரூ. 190-க்கும், பூண்டு விலை ரூ.130-க்கும், வண்ண குடமிளகாய் விலை ரூ. 180-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :