Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் நேற்று மட்டும் 2 லட்சம் பேரு சொந்த ஊருக்கு பயணம் ... போக்குவரத்து துறை தெரிவிப்பு

சென்னையில் நேற்று மட்டும் 2 லட்சம் பேரு சொந்த ஊருக்கு பயணம் ... போக்குவரத்து துறை தெரிவிப்பு

By: vaithegi Sat, 22 Oct 2022 10:01:29 PM

சென்னையில் நேற்று  மட்டும் 2 லட்சம் பேரு சொந்த ஊருக்கு பயணம்   ...    போக்குவரத்து துறை தெரிவிப்பு

சென்னை: 2 லட்சம் பேரு சொந்த ஊருக்கு பயணம் .... நாடு முழுவதும் நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து கொண்டு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு கொண்டு வருகின்றன.

இதனை அடுத்து சென்னையில் 6 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை விட கூடுதலாக 4,128 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் அரசு பேருந்துகளில் ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். மேலும் இது தவிர தனியார் ஆம்னி பேருந்துகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

department of transport,chennai ,போக்குவரத்து துறை,சென்னை

இதையடுத்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொது மக்கள் எவ்வித சிரமமுமின்றி சென்றனர். சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் விழுப்புரம் பகுதி மக்கள் செல்ல விடப்பட்டன. இது தவிர 500-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில் 30 ஆயிரம் பேர் வெளியூர் சென்றனர்.

மேலும் இதன் இடையில் கோயம்பேட்டில் இருந்து இன்று அதிகாலை 4 மணியில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், செஞ்சி செல்லக்கூடிய பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. முன்னதாக தீபாவளி சிறப்பு பஸ் இயக்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் நேற்றிரவு ஆய்வு செய்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு வெளியூர் செல்ல வசதியாக செய்யப்பட்டு இருந்த ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

Tags :